ஆல்சாமி அப்டின்னா என்ன ?

ஆல்சாமி அப்டின்னா என்ன ? இந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியாம எழுதுனது இது.

"ஆலயம் தொழுவது சாலவும் நன்று" -  ஒளவையார்

பலராலும் தவறான அர்த்தம் கொள்ளப்பட்ட ஒரு அவ்வையின் சொல் இது. "கோயிலுக்கு சென்று சாமி கும்பிடுவது  ரொம்ப நல்லது" என்று தவறாக அர்த்தம் கற்பிக்கபட்டது. இதன் உண்மையான அர்த்தம் - "ஆலயத்திற்கு மரியாதை செலுத்துவது மிகவும் நன்று ".


7ம் நூற்றண்டு  வரை தமிழகத்தில் புத்த மதமும் ஜைன மதமும் போட்டி போட்டு கொண்டு பரவி இருந்தது. 7ம் நூற்றாண்டுக்கு பின்னர் இந்து மதம் நிலை பெற்றது. தமிழர்களுக்கு முதன் முதலில் கல்வி கற்க வைத்து, எழுத படிக்க கற்று  கொடுத்த மதங்களே புத்தமும் ஜைன மதமும்.

கடவுள் வழிபாட்டில் நம்பிக்கை இல்லாத இம்மதங்கள் பரவுவதற்கு கல்வியை பயன்படுத்தியது. "ஆலயம்" என்ற சொல்லும் அப்போது உருவானதே, இந்த ஆலயங்களில் கல்வி பயின்றவர்களே திருவள்ளுவரும், ஒளவையாரும், ஐம்பெரும் காப்பியங்கள் எழுதிய தமிழர்கள்.

சிலப்பதிகாரம் - எழுதியவர்  இளங்கோ அடிகள் - ஜைன மதத்தை சார்ந்தவர்.
மணிமேகலை - எழுதியவர் சீத்தலை சாத்தனார் - புத்த மதத்தை சார்ந்தவர்.
சீவக சிந்தாமணி - திருத்தக்க தேவர்  - ஜைன மதம்.
வளையாபதி -  ஜைன மத காவியம்.
குண்டலகேசி - முழுமையாக கிடைக்க வில்லை, காரணம் புத்த மதத்திற்கு எதிரானவர்களால் அளிக்கப்பட்டது.இவ்வாறு தமிழர்களுக்கு கல்வி கொடுத்த மதமான புத்தமும் ஜைன மதமும் இயங்கிய கல்வி சாலைகளுக்கு பெயரே "ஆலயம்".  அங்கிருந்த ஆசிரியர்களின் பெயரே ஆலயசாமி அல்லது "ஆல்சாமி". கட்டிடம் இல்லாத இடங்களில் ஆலயங்கள் மரத்திற்கு அடியில் இயங்கியது. அதனால் Banyan மரத்திற்கு "ஆலமரம்" என்ற பெயர் வந்தது.


சைவ வைணவ மதங்கள் தமிழகத்தில் அரசர்களின் ஆதரவை பெற்று தமிழ் நிலத்தில் பரவியது. கல்வி கற்று கொடுத்த ஆலயங்கள் எல்லாம் சைவ மற்றும் வைணவ பஜனை மடங்களாக மாற்ற பட்டது. ஜைன மத தமிழ் ஆசிரியர்கள் 8000 பேர் மதுரையில் கழுவேற்றி  கொன்றான் சைவ மதத்திற்கு மாறிய கூன் பாண்டியன் என்னும் மன்னன். இந்த தமிழ் படுகொலைக்கு காரணமாக இருந்தவர் 63 நாயன்மார்களில் ஒருவரான "சம்பந்தர்". (7ம் நூற்றாண்டு).

தமிழர்களின் வீட்டில் இருந்த புத்த மத புத்தகங்கள் சைவ வைணவ  மத சாமியார்களின் ஆணை படி ஆற்றில் விட  பட்டது. பௌர்னமி நிலவன்று புத்தகங்களை ஆற்றில் விட்டால் செல்வம் பெருகும் என்ற மூடநம்பிக்கை பரப்பபட்டது. கல்வி கற்று கொடுத்த புத்த மத ஆசிரியர்கள் இலங்கைக்கு தப்பினர். மதம் மாறிய தமிழர்கள் சைவ வைணவ நூல்கள் எழுத  தொடங்கினர்.பெரிய  புராணமும், கந்த புராணமும், திருப்பாவையும், மற்ற மத நூல்கள் எழுதபட்டது. சைவமும் வைணவமும் தமிழ் நிலம் முழுவதும் பரவியது.  காலபோக்கில் பரப்பியவர்களின் கல்வி பிடுங்கபட்டது.

புத்த ஜைன மத நூல்களில் இல்லாத சாதி உண்டானது . சில சாதியினருக்கு மட்டுமே கல்வி உரிமையாக மாறியது. இன்று நாம்சொல்லும் இட ஒதுக்கிடு 10ம் நூற்றாண்டில் உருவாகி வெறும் 2% மக்களுக்கே கல்வி கற்கும் உரிமை கொடுக்க பட்டது. இந்நிலை மாற ஆயிரம் ஆண்டுகள் ஆனது.Alsamy statue in Tuticorin Dist

2 comments:

 1. //7ம் நூற்றண்டு வரை தமிழகத்தில் புத்த மதமும் ஜைன மதமும் போட்டி போட்டு கொண்டு பரவி இருந்தது. 7ம் நூற்றாண்டுக்கு பின்னர் இந்து மதம் நிலை பெற்றது.//

  Dasavadharathula Kamal story solluvaare adhe pola irukku ya un story

  ReplyDelete
 2. @Kannan

  Kamal sonnathu 11th century story thaan.. Naan solrathu 7th century :) ennode storye movie panna buddhistayum jainistayum nama uyirode vidale..
  http://en.wikipedia.org/wiki/Madurai_massacre

  ReplyDelete