முருகன் யார் ?


 எப்படி பார்த்தாலும் தமிழ்க்கடவுள் முருகன் சைவத்திற்குள் வரமாட்டார், சிவனுக்கு மகனாக மாற்றி அவரை சைவத்திற்குள் கொண்டுவர முயற்சி எடுத்த காலம் 11 ஆம் நூற்றாண்டு இந்த காலகட்டத்தில் தான் புதிய புதிய கதைகள் கதாகலாட்சேபம் என்ற பெயரிலும் புதிய சாஸ்திர விளக்கம்(உரை) என்ற பெயரில் கந்த புராணம் இதர எல்லாம் தினிக்கப்பட்டது.
Jain Monk teaches people and get food in return
ஒருகாலத்தில் இதை நம்பாத மக்கள் இருந்தனர், ஆகையால் தான் வள்ளி திருமண கதைகட்டி மூலை முடுக்கு எல்லாம் முருகன் பிள்ளையாரின் தம்பி சிவனுக்கு மவன் என்று சாமர்த்தியமாக ஏமாற்றினார்கள், அப்படியே  தமிழ் சமண கடவுளான முருகனை தங்கள் வசம் கொண்டு வந்து விட்டார்கள்.  முருகன் வரலாறு மீட்கப்பட்டால் தமிழகத்திலும் தமிழிலும் மறைந்துள்ள பல உண்மைகள் வெளிவரும். சங்ககால தமிழ் நாட்டில் முருகன் தலை சிறந்த மருத்துவராக அல்லது ஆசிரியராக இருந்திருக்ககூடும். மருத்துவசேவையில் அதிகம் சமண முனிகள் ஈடுபாடு கொண்டிருந்தனர், இதைக் காக்கைப்பாடினியார் பாடல்கள் மூலம் காணலாம், அவரது பாடலில் காவடி என்னும் பதம் காணப்படுகிறது அதாவது கழியில் மருந்துப்பொருட்களைக் கட்டிக்கொண்டு ஊர் ஊராக சுற்றும் சமண முனிகள் பொதுமக்களிடம் பழகுவதற்காக அம்மணமாய் இராமல் முழுமையாக மொட்டை எடுத்து கோமனம் மட்டும் கட்டி சுற்றுபவர்கள் கிட்டத்தட்ட முருகன் இந்தப்பாலுக்கு உதாரணமாய் விளங்குகிறார். அழகென்ற சொல்லுக்கு அர்த்தம் தமிழ் தான் அது முருகனாய் மாறியுள்ளது.  இன்றும் முருகனின் அன்னையாக இசக்கி அம்மன் முப்பிடாதி(மூப்புபிணியகத்தி) போன்றவற்றைக்கூறுவார்கள்.
இவர்கள் இருவரும் சமண முனிகளுக்கு சேவை செய்பவர்கள் என தமிழ் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இதில் அவ்வையையும் சேர்க்கலாம்.


மிகப்பழமையான கோவில் என்றால் குற்றால மலை அருகில் உள்ள திருமலைக்குன்று அடுத்து குறுக்குத்துறை(திலி) இவை இரண்டுமே சமண பீடங்களாக இருந்து சைவ முருகன் கோவிலாக மாற்றப்பட்டவை. திருச்செந்தூர் 13ஆம் நூற்றாண்டு வரை பங்கு க்கு சான்று என்ற சத்திய சாமியாக இருந்தது ஆத்தூரில் பிறகு கடற்கரையோரம் சிப்ட்டானது, அடுத்து திருப்பரங்குன்றம் இன்றும் சமணர் குகைதான்.


முருகனைப்பற்றி நடுநிலையான ஆய்வு தேவை அப்படி முருகன் வரலாறு மீட்கப்பட்டால் தமிழகத்திலும் தமிழிலும் மறைந்துள்ள பல உண்மைகள் வெளிவரும் செய்பவர்யாரோ? 

No comments:

Post a Comment