சக்தி யார் ?

இந்த ஆடி மாதம் கொண்டாடும் மாரியம்மன் கன்னி வழிபாடு என்னும் அதிக்குடிகளின் வழிபாடு, இன்று இந்து மதக்கடவுளாக (சக்தி வழிபாடாக) மாற்றப்பட்டுள்ளது, கன்னி வழிபாடு புத்தமத வழிபாடாக கிழக்கு ஆசிய நாடுகள் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது, yi hui pusa அதாவது மாதர் ஆப் மெர்சி என்ற பெயரில் அழைக்கப்படுகிறது, சிலப்பதிகாரத்தில் வரும் தாரா தேவி தான் இந்த யு ஹுய் பூஸா இந்த உருவத்தில் கரங்களில் எந்த வித ஆயுதமும் கிடையாது கைகளில் நன்னீர் குவளையும் மற்றோரூ கையில் மூங்கில் குருத்து ஒன்றை கையில் வைத்திருப்பார். 


கன்னி வழிபாடு பற்றி திருநெல்வேலி, சேலம் மற்றும் விழுப்புரம் கிராமக்கள்  அதிகம் அறிந்து வைத்துள்ளனர். சமணத்திலும் மருத்துவ தெய்வமாக வழிபடப்படுகிறது, சமணத்திலும் புத்ததிலும் இந்த பெண் தெய்வ வழிபாட்டை இணைத்தவர்கள் நாம்(தமிழர்கள்) தான். வேத காலத்தில் பெண் தெய்வ வழிபாடு இல்லாமல் இருந்தது, எப்படி புத்த சமணர்களை பார்த்து சனாதனிகள் மாமிசம் சாப்பிடுவதை தவிர்க்க ஆரபித்தாரோ அதே போல் தான் பெண் தெய்வ வழிபாட்டையும் அங்கிருந்து எடுத்துக்கொண்டனர். 


காரணம் கன்னி வழிபாடு இந்தியாவின் ஆதிக்குடிகளின் வாழ்க்கை முறையில் ஒன்றாகி விட்டது.


ஓம் சக்தி போன்றவைகள் மக்களின் அறியாமையை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட செயற்கை வழிபாட்டு தெய்வங்கள் இன்று கும்பிடும் ஓம் சக்தி, இதர வைதீக மத பெண் தெய்வங்கள் எல்லாம் தவிர்க்க முடியாத ஏற்றுக்கொண்டது தான், இதில் வருமானம் அதிகம் வர வர அதையும் பல வித பெயர்கள் (பார்வதி லட்சுமி, சரசுவதி, துர்க்கா, இதர இதர என சுமார் 3000 பெயர்கள் வரை உருவாக்கிக் கொண்டார்கள்.

No comments:

Post a Comment