சரவணன் யார் ?

 
சரவணா, சரவணன், சரவணக்குமார், சரவணராசு, சரவண தேவி, சரவணசங்கர், சரவணக்குமாரன், என்று சரவணா என பெயர் ஆரம்பிக்கும் அனைவரும் நாளை ஒரு நாளாவது மஹாவீரரை நினைத்துப்பார்க்கவேண்டும்.

சரவணா முருகனின் பெயர் என்பதெல்லாம், மத ரீதியாக பரப்பிவிடப்பட்ட பொய்கள்  கிமு 300 வருடங்களுக்கு முன்பு பவுத்தமும், சமணமுமே தமிழர்களின் தலையாய மதமாக திகழ்ந்தது, இரண்டு மதங்களும் மக்களின் கல்வி, மருத்துவம், வாணிபம் தொழில் போன்றவைகளில் பெரிதும் துணை நின்றனர்.

நாம் பள்ளிக்கூடங்களில் மதிய உணவு உண்டு வந்தோமே அதைத்துவக்கிவைத்தவர்கள், சமண, பவுத்தர்கள் தான், வீடு வீடாக சென்று அரிசி இதர தாணியங்கள் வாங்கி வந்து சமண பவுத்த விகாரைகளுக்கு கல்வி கற்ற வரும் குழந்தைகளுக்கு உணவு சமைத்து வழங்குவார்கள், பகலில் பெற்றோர் வயல் வேலை அல்லது வேறு பணிக்கு சென்றுவிடுவதால் அவர்கள் குழந்தைகளின் மதிய உணவை கவனிக்கவேண்டி இப்பணியை செய்தனர்.

சமண முனிவர்கள்தங்களிடம் கல்விபயின்ற மாணவர்கள் குழுவில் அனைவரையும் கவனிக்க ஒரு தலைமைப் பையனை நியமித்தனர். அந்த மாணவனை ஷரஹனா என பாலியில் அழைத்தனர். ஷ்ராவன் என்றால் இளைஞர் என்று சமஸ்கிருதத்தில் பொருள் படும். இந்த ஷரஹனா தான் தமிழில் சரவணா என்று அழைக்கப்பட்டனர்.

பள்ளி\விகாரைகளில் மதிப்பு மிக்க மாணவன் என்றால் எந்த பெற்றோருக்குத்தான் ஆசை வராது, ஆகையால் தொடர்ச்சியாக தங்கள்வீட்டில் ஆண் குழந்தை பிறந்தால் அக்குழந்தைக்கு சரவணா என்றே பெயர் வைத்து அழைக்க ஆரம்பித்தனர்.

சுமார் 2500-ஆண்டு பழமை வாய்ந்த இந்த சரவணா என்ற பெயர் கி.பி ஏழாம் நூற்றாண்டில் சைவம் வந்த பிறகு சிவனின் பையனாக முருகன் என்று மருவியது முருகனும் இளையவனாகையால் ஏற்கனவே லட்சக்கணக்கில் உள்ள சரவணாக்களையும் முருகனோடு கோர்த்து விட இறுதியில் சரவணா வும் முருகக்கடவுள் பெயராக மாறிவிட்டது. (மறுப்பு தெரிவிப்பவர்கள் தகுந்த ஆதரத்துடன் பதிலிடவும்)

தயவு செய்து
பத்தாம் நூற்றாண்டுக்கு பின் வந்த கந்த புரானம் சிவபுராணங்களை ஆதாரமாக காட்டவெண்டாம்.

நதிக்கரை நாகரீக காலத்தில் அதாவது கிமு அய்ந்தாயிரம் அதற்கு முன்பும் பின்பும் தமிழகத்தில் நாகரீகம் செழித்து இருந்தது. இதை ஆதிச்ச நல்லூர் மூலம் அறிந்துகொள்ளலாம். 
 
வேதகாலம் சிந்து வெளி நாகரீகம் அழிந்த பிறகு கங்கைக்க
ரையை ஆக்கிரமித்தது, இது கிமு மூவாயிரம் முதல் மிகவும் மெதுவாகத்தான் பரவியது. கங்கைச்சமவெளியில் வேதகாலம் மிகவும் புதிய கலாச்சாரம், இதன் மூலம் தான் ஆரியர் இனம் வெளியிலிருந்து வந்தது என கண்டறிய முடிகிறது. உதாரணம் உணவிற்கு விவசாயம் கங்கைச்சமவேளியின் மிக முக்கிய தொழில் ஆனால் வேத காலத்தில் விவசாயம் பாவம் என்கிறது. விவசாயத்திற்கு பயன்படும் அத்தனையும் யாகம் என்ற பெயரில் கொலைத்தொழில் புரியசொல்கிறது. இருக்கு வேதத்தில் ஒரு யாகத்தில் பதினேழாயிரம் பசுவைக்கூட பலியிடலாம் என்கிறது.(பசு என்றால் கால் நடை உட்பட) சிலப்பதிகாரம் சொல்கிறது என்பது பசுக்களை யாகத்தில் பலியிட கட்டி வைத்திருந்தனர் என சிலப்பதிகாரம் சொல்கிறது..
இந்த வேதகால கொடுமையை எதிர்த்து தான் பவுத்தமும் சமணமும் கிளம்பியது.

சரி தமிழ் நாட்டிற்கு வருவோம். ஏன் பவுத்தமும் சமணமும் தமிழ் நாட்டில் மிக விரைவில் பரவியது என்றால், இவற்றிக்கு முன்பு தமிழரின் வாழ்வாதாரத்திற்கான ஒரு மதம் இருந்தது. அதன் சாயலுடன் சேர்ந்து பவுத்தமும் சமணமும் இருந்த காரணத்தால் சில நூற்றாண்டுகளிலேயே தமிழகமெங்கும் செழித்து வளர்ந்தது. 

 
என்னுடைய பல பதிவுகளில் சமண\பவுத்த இடங்கள் குறித்து இன்று சிவத்தலங்கள் எல்லாம் ஒரு காலத்தில் சமண பவுத்த விகாரைகள் தான், ஊர் பெயரும் உதாரணம் திரு சிலப் பள்ளி(திருச்சி) , மதுரை, சீலம் மருவி சேலம் ஆனது, தருமபுரி, நாக நெறி (நான்குநேரி)நாகப்பட்டினம், என பலவற்றைக் கூறலாம் அதே நேரத்தில் இன்றும் சாட்சியங்களாக இருக்கும் சமண குகைகள், படுக்கைகள், சுதைகள், என பல உண்டு, 

 
நன்றாக கவனிக்க வேண்டிய ஒன்று எந்த சைவகொவில் கிமு விற்கு முன்பு கட்டப்பட்டது. மதுரை,திருநெல்வேலி கோவில்கள் பனிரெண்டாம் நூற்றாண்டு, தஞ்சை பத்தாம் நூறாண்டு, என அனைத்தும் எட்டாம் நூறாண்டிற்கு பிறகு தான் கட்டப்பட்டது. ஆனால் கிமுவில் கட்டப்பட்ட பெருங்குன்ற பள்ளியும், கழுகுமலைகுன்றும் அழகர்கோயிலும் பிற்காலத்தில் சைவ வைனவத்தலங்கலாக மாற்றப்பட்டன. 

 
ஒரு உண்மை தமிழருக்குரிய அனைத்து பண்பாட்டு சமய தொழில் நுட்ப நூல்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு விட்டது. ஆனால் சரவணா போன்ற சாட்சியங்களை இன்னும் பல நூற்றாண்டுகள் ஆனாலும் அழிக்க முடியாதுNo comments:

Post a Comment