திபங்கர புத்தா !

தமிழர்கள் பலருக்கு தெரியாத ஒரு புத்தர் தீபங்கர புத்தா(輕佛) நமக்கு மிகவும் அன்னியமான பெயராக தெரியும் ஆனால் நமது கலாச்சாரத்திற்கு மிகவும் நெருங்கிய தெய்வம், சீனத்தில் இவரை பற்றி கூறும் போது இவர் பிறந்த உடன் இவரது தெய்வீக தன்மையை கண்டு இவரை இவரது பெற்றோர்கள் தாமரை தடாகத்தில் விட்டு விட்டனர். வனவிலங்குகள் இந்த குழந்தையை வளர்த்தன, இவருக்கு புலி ஒன்று பால் தந்ததாகவும், சீன இலக்கியங்கள் கூறுகின்றன.

 வனத்தில் இருக்கும் இவர் புலியின் மேல் வருவதாகவும், தனது இறுதி நாட்களில் நான் மீண்டும் வடக்கில் மானுட சம்பகுலத்தின் சாக்கிய மன்னனுக்கு சித்தார்த்தன் என்ற பெயரில் மகவாக பிறப்பேன், அந்த பிறப்பு முழுவதும் உங்களுடனே இருந்து உங்களுடனே மறைவேன் என்றார். இவர் மக்களின் முன்பே சோதியாக மறைந்தார் என்றும் கூறுவார்கள்,

இவரின் பெயரிலேயே ஒரு உண்மை மறைந்து கிடைக்கிறது அதாவது தீபங்கரன்- தீபங்களில் கரைந்தவன், தீபங்கர புத்தா என்றால் தீபங்களில் கரைந்த புத்தர் என்று பெயர்,

இவர் குறித்து இஸ்லாம், பைபிள் என அனைத்தும் குறிப்புகள் தருகிறது,
இஸ்லாத்தில் இவர் ஜிப்ரயில்(தெற்கு சுவர்க்க வாசலின் தேவதை) பைபிலில் தெற்கு சுவர்க்க வாசலின் பாதுகாவலன் என்று குறிப்பிடுகிறார்கள்,

இவரது வருடம் சீன இலக்கியங்களில் 10000 வருடம் என்று குறிப்பிடுகிறார்கள். ஆனால் பைபிள் மற்றும் குரானை பார்க்கும் போது கிருஸ்து பிறப்பதற்கு 2000 வருடங்களுக்கு முன்பு என தெரிகிறது.
தெற்கு வாசல் என்று சொல்லும் போது அது ஆசியகண்டத்தில் தென் முனையான குமரிமுனையை குறிக்கிறது, 


இதற்கு சான்றாக புத்தந்துறை என்னும் ஊர்(கன்னியாகுமரி) புத்தங்கோடு(கெரளா) போன்ற ஊர்கள் கௌதமபுத்தரின் பிறப்பிற்கு முன்பே தோன்றிய ஊர்கள்.


இதை படித்த உடன் ஒரு சாமி பெயர் நினைவிற்கு வருமே ??

No comments:

Post a Comment