சிரிக்கும் குபேரன் யார் ?

இப்படித்தான் கடவுள் உருவாயிருப்பாரோ, சென்னையில் உள்ள  உணவு விடுதிக்கு சென்று சாப்பிட்டு வந்தேன், பணம் கொடுக்கும் இடத்தில்(கல்லா என்று சொல்வார்கள்) அழகிய மைத்திரியா புத்தா(சிரிக்கும் புத்தா) அல்லது இதர லாஃப்பிங் புத்தா என்றும் சொல்வார்கள். ஆனால் அவர் மைத்திரியா புத்தா என்று தான் கீழ் திசை நாடுகளில் அறியபட்டுள்ளார். அதாவது இனி எதிர்காலத்தில் வருபவர் அனைவருக்கு மகிழ்ச்சிகளை அள்ளித்தருபவர் என்ற ஒரு அடையாளம்.

ஆனால் இங்கே அவருக்கு பூக்கள் வைத்து, சிறியமாலை ஒன்று போட்டு சந்தனம் குங்குமம் எல்லாம் வைத்து விட்டார்கள். எனக்கு முதலில் ஆச்சர்யம் என்னடா புங்சுயீ என ஏமாற்றுவோரின் மூலம் அறிமுகபடுத்தபட்ட மைத்திரியா இன்று இந்து தெய்வங்களுக்கு இணையாக உள்ளதே என்ற ஆச்சர்யத்தில் கடைக்காரிடம் இவர் பெயர் தெரியுமா என்றேன் அவர் யோசிக்காமல் குபீரென்று இவர் தான் குபேரன் என்றார்.

நான் சார் இவர் குபேரன் கிடையாது மைத்திரிய புத்தா என்றேன் அவர் ஆமாம் சீனாவில் இவர் மைத்திரிய புத்தா, இங்கே குபேரன்,  புத்தருடைய மகன் தானே மைத்திரிய புத்தா, இவரும் விஸ்னுவுடைய மகன் தான், விஸ்னுவின் அவதாரம் புத்தா, என விளக்கம் சொல்ல எனக்கு தலை சுற்றியது, ஆயிரம் புத்தர் வந்தாலும் தமிழ்நாட்டு தலையெழுத்தை  “ஏத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே” இப்படித்தான் சீனா புத்த யீ ஹுயி போதிசத்வா படைக்கும் கடவுளான பராசக்தியாக இந்தியாவில்  மாறி இருப்பாள். ஆனால்  சீனாவில் ஆயுதம் எதுவும் இல்லை, வெறும் நன்னீர் கலயம் மட்டும்..  கையில் இங்கே எல்லாம் உண்டு !!

No comments:

Post a Comment