தமிழகத்தில் சமணர் கொலை

ஒரு சமண குகை ஆலயம் எப்படி இந்து வழிபாட்டுத்தலமாக மாறியது

திருப்பரங்குன்றம் இந்து கோவிலாக மாறிய கதை

திரி பரங் குன்று என்பது திரி ரத்தினங்கள் படிக்கப்படும் பெரிய குன்றம் என்று பொருள் 
 

அங்கு இருந்த பௌத்த, மாஹாவீரர் சிலைகளை அகற்றிவிட்டு வைதீக சிலைகள் வைக்கப்பட்டு விட்டன. இவை நடந்து சுமார் 800 வருடங்கள் ஆகிவிட்டது

இந்த வழிபாட்டுத்தலத்தில் இருந்து தான் சமயம் கடந்து மருத்துவம் ஒன்றை மட்டுமே தனது குறிக்கோளாக கொண்டு சிறுவயதில் இருந்தே தமிழகம் முழுவதும் சுற்றி மக்களை குணப்படுத்திய ஒரு துறவியை (சாக்கிய துறவி என்றும் பலர் சொல்வார்கள், அதற்கான உறுதியான சான்றுகள் இன்றும் கிடைக்கவில்லை, எதிர்காலத்தில் கிடைக்கலாம்,) கந்தன், முருகன், சரவணா, கடம்பா, எக்ஸ்ட்ரா எக்ஸ்ட்ரா பெயர்களை வைத்து மக்களை குழப்பி தந்திரமாக ஆர்ய பெண்ணான தெய்வனயை திருமணம் செய்து கொண்டார் என்று கதை விட்டு அவரை வைதீக ஸ்வாமீயாக்கினார்கள்.

சமண முனிவர்களை கழுவேற்றிய சுமார் 200 ஆண்டுகளாக திரி பருங் குன்றத்தில் யாரும் வழிபாடு செய்யக்கூடாது என்றும் அங்கு செல்பவர்கள் கழுவேற்றப்படுவார்கள் என்றும் ஆணை பிறப்பிக்கபட்டு சமண குகையான இன்றைய இந்து வழபாட்டுத்தலத்தின் முன் கழுமரமும் கழுவேற்றிய நிலையில் ஒரு சிலையும் வைக்கப்பட்டது.

ஆனால் மக்கள் தாங்களின் வாழ்க்கை வழிகாட்டியவர்களை மறக்க முடியாமல் பலர் அங்கு சென்றதால் கழுவேற்றப்பட்டனர். பிறகு இக் குகைத்தலத்தின் புகழ் காரணமாக அந்த சமணக்குகையை இந்து வழிபாட்டுத்தலமாக மாற்றிவிட்டார்கள்.

அந்த கழுமரம் இன்றும் கோவில் வாசலில் பூக்கடைகளின் மத்தியில் வாளாவிருக்கிறது. அதில் எத்தனை உயிர்கள் துடிக்க துடிக்க மாண்டிருப்பார்கள் என்பதை மறந்து அதன் அருகில் குப்பை கூழங்கள் போட்டு வைப்பார்கள், சிலையும் வாசல் தளத்தின் அருகில் இருக்கிறது.


No comments:

Post a Comment