வாழ்வது எப்படி ? புத்தர் வாக்கு


புத்தர் தர்கங்களை விரும்ப வில்லை. மாலுங்கியர் என்பவரது புதல்வர்கள் புத்தரிடம் பிறப்பு இறப்பு, இறப்பின் பின் மனித நிலை குறித்து கேள்வி கேட்கிறார்கள். இதற்கு பதிலாக புத்தர் ஒரு உவமை கதை கூறினார்.


ஒருவன் விஷமூட்டிய அம்பினால் காயமடைந்து வருந்தி கொண்டிருக்கிறான். அவனுடைய நண்பன் வைத்தியரை அழைத்து வருகிறான். வைத்தியர் அம்பை வெளியே எடுக்கே போகும் நேரத்தில், காயமடைந்தவன் "நிறுத்துங்கள் ! எனது கேள்விகளுக்கு முதலில் பதில் சொல்லிவிட்டு அம்பை எடுங்கள்" என்று கூறி , கீழ்க்கண்டவற்றை கேட்கிறான்:

1) யார் இந்த அம்பை எய்தது ?
2) இதை எய்தவன் சத்திரியனா  ?  பிராமணனா ? வைசியனா ? சூத்ரனா ?
3) அவன் உயரமா ? குள்ளமா ?
4) அம்பு எந்த வகையை சார்ந்தது ?
5) அம்பு எந்த கொல்லன் உலையில் செய்தது ?

இதற்கெல்லாம்  வைத்தியன் பதில் சொல்ல ஆரம்பித்தால் , காயமடைந்தவன் இறந்துவிடுவான். இதைபோலேவே உலகிற்கு அப்பாற்பட்ட விஷயங்களை குறித்து கேள்வி கேட்கும் மாணவனும் - துக்கம் , துக்க உற்பத்தி, துக்க நிவாரண மார்க்கம் என்னும் நான்கு சத்தியங்களை பற்றி முழுமையாக தெரிந்து கொள்வதற்கு முன்பாகவே இறந்து போய்விடுவான் என்பது நிச்சயம். இதிலிருந்து புத்தர் தர்க மத விவாதங்கள் , கோட்பாடுகள் , உலகம் உண்மையா பொய்யா, ஆன்மா உண்டா இல்லையா போன்ற விவாதங்களை விரும்பவில்லை என்பது தெரிகிறது.

இருக்கும் வரை அமைதியான , நிம்மதியான , தர்க விவாதங்கள் இல்லாத வாழ்வு முறையே சிறந்தது  என்கிறது புத்தம்.


No comments:

Post a Comment