ஸுபிக்கள் - இஸ்லாமியத்தின் ஆழ்ந்த உண்மையான வடிவம்


ஔரங்கஸீப் என்ற முகலாய மன்னன்,அவனுக்கு இசை மீது அவ்வளவு பகை உணர்வு. அவனுடைய எதிர்ப்பின் தீவிரத்தால் தலைநகரில் இசை அழிந்துகொண்டு வந்தது. பாடுவதற்கோ,நடனமாடுவதற்கோ இசைக்கருவிகளை இசைப்பதற்கோ மக்களுக்கு வெகு பயமாகிவிட்டது. இசை சட்டப்படி ஒரு குற்றம் என்பதால் அவ்வளவு பயம். ஒரு நாள் தலைநகரில் இருந்த இசைக்கலைஞர்கள் எல்லோரும் ஒன்று கூடினார்கள்.அரசனை எதிர்த்து ஊர்வலம் நடத்தத் திட்டமிட்டார்கள். பிரம்மாண்டமான சவ ஊர்வலம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்தார்கள்.இசையை பிணமாக வைத்துக்கொண்டு நடத்திய சவ ஊர்வலம். டெல்லியில் எல்லோருக்கும் இசை வெகு பிடித்தமானது.நிறைய இசைக்கலைஞர்களும் அங்கே இருந்தார்கள்.எனவே அந்த சவ ஊர்வலம் பிரம்மாண்டமான ஊர்வலமாக ஆகிப் போய்விட்டது.

பல்லாயிரக்கணக்கில் மக்கள் பாடையை பின்தொடர்ந்து வயிற்றிலும் வாயிலும் அடித்து ஓலமிட்டுக்கொண்டு போனார்கள். ஊர்வலம் அரண்மனையைக் கடந்த போன போது எழுந்து ஆரவாரத்தைக் கேட்டான் மன்னன்.என்ன இவ்வளவு பெரிய ஊர்வலம் என்றும் என்ன இவ்வளவு ஆரவாரம் என்றும் என்ன இவ்வளவு பேர் என்றும் திகைத்துப் போன அவன்,யார் செத்துப் போனது என்று கேட்டான்.முக்கியமானவராக இருக்க வேண்டும்.நான் கேள்விப்படாத அவன் யார் என்று கேட்டான்.
இசைதான் செத்துவிட்டது.அதற்குத்தான் சவ ஊர்வலம் என்று சொன்னார்கள்.
அவனோ,"அப்படியா? சரி சரி,ஆழமாகப் புதைத்துவிட்டு வரச்சொல்.மறுபடி எழுந்து வந்து விடப்போகிறது."என்றானாம். இதுதான் முகம்மதியர்களின் பார்வை. ஆனால்,ஸுபிக்கள் இசை நடனம் என்று எல்லாக் கலைகளுக்கும் மீட்டுருவம் தந்தார்கள். "எந்த மதமும் இசையில்லாமல் இருக்க முடியாது என்பது அவர்களுக்குத் தெரிந்திருந்தது." இது முகம்மதியர்களுக்கு நெருடலான விஷயம்.


ஸுபிக்கள் எதிரிகளாக இருக்க வேண்டும் என்றார்கள்.அவர்களைக் கொன்றுவிட முயன்றார்கள்.ஆனால் முடியவில்லை. ஸுபிக்கள் இசையை மீண்டும் இஸ்லாத்திற்குள் கொண்டு வந்தார்கள்.அப்படிக் கொண்டு வந்தே ஆகவேண்டி இருந்தது. அதனால்தான் இஸ்லாத்தில் ஸுபிக்களுக்கு எதிராக ஒரு விரோத பாவம் இருந்து கொண்டே இருக்கிறது. இஸ்லாம் முழுக்க மறந்துவிட்ட இசையை ஸுபிக்கள் மீண்டும் கொண்டு வந்ததால்தான் இந்த விரோத பாவம். இதில் வேடிக்கை என்னவென்றால் ஸுபிக்கள்தான் "ஸுபிக்கள்தான் இஸ்லாமியத்தின் ஆழ்ந்த உண்மையான வடிவத்தை தெரிந்து வெளிக்கொண்டு வந்தவர்கள்." "அவர்கள்தான் இஸ்லாமியத்தின் மலர்கள்." இசை என்பது மதம் தோன்றி வளரும் அருமையான வயல்.வளர்ந்து வரும் எதற்கும் இசை அவசியம். பிரார்த்தனை பாடல்களாக இருக்க வேண்டும்.தியானம் இசையாக இருக்க வேண்டும். ஜீவிதம் போகப்போக இசையாக மாறிப்போக வேண்டும். 

No comments:

Post a Comment